தலைக்குள்
வண்டுகள் ஊர்ந்தபடி…
பிய்த்துப் போட முடியாத நினைவுகளை
தின்று வளர்ந்து கொண்டிருந்தன.

இறுக்கிக் கண்கள் மூடி
மெது…மெதுவாய் அமைதி
இருட்கருமையின் பெருங்கருணை
உறக்கம்!

வண்டுகள் ஊரத் தொடங்கிவிட்டன
வளர்கிறது மனக்காடு.

உள்ளிருந்து குரல்கள்
தனித்த காகம் கரைகிறது.

சூரியச் செருக்கு
இரவைக் கொன்றது!

-தர்மினி-

Advertisements