என் தந்தையின் வீடென்று இயேசு சொன்னது
ஆலயத்தை என்றனர்.
இறந்த பின், அவர் உடலை என்றனர்.
இரண்டாயிரத்துப் பதினேழு வருடங்களுக்கும் மேலாக தந்தைகளுக்கே வீடாம்!
நம் வீட்டைத் தந்தையும் எரித்தான். 
அடுத்து, ஆமியும் எரித்தான்.
என் தாய்க்கு வீடென்று எதுவுமில்லை.
எனக்கு இவ்வீடோ ஹொட்டலொன்றில் வாழ்வதைப்போலவே நினைப்பு.
நாளுக்கு முப்பது யூரோப் படியாக வாடகை.

Advertisements