அகதி…அகதி…
கூவெனக் கத்திவிட்டு ஓடியது
குரலா?
அந்நியமான மனமா?
இறங்கி விட்ட நாடொன்றில்
அகதி மனு
பெயர்கள்
காரணங்கள்
காயங்கள்
கேள்விகள்…
இருப்புக்கு நியாயங்களை முன் வை.
விண்ணப்பமொன்றை நிரப்பு.
ஒறிஜினலாய் நீ யார்?
இது
வரையறுத்த தேசமொன்றைச் சுமக்கும்
முதுகு.
*

தர்மினி


நன்றி – ‘ஜீவநதி’

Advertisements