-மோனிகா-

வாரிக் கலைக்கும் கூந்தல்,

விழித்திரை தொடாது மை படர

அகல விரியும் கண்கள்

சலங்கைகள் இட்டவிழ்த்த கால்கள்

தீண்டுதல் பழகியும் மடக்கி வைக்கப்பட்ட விரல்கள்

மார்ப்பு முடி செறிந்த ஆடவர் மார்போ

மணம் பரவிய வாயிற்சேலையணிந்த மடியோ

ஏதோ ஒரு இடம் தேடும்

மனம் ஒட்டிய தேகம்

இவை அனைத்திற்க்கும்

அறிந்திருக்க நியாயம் இல்லை

நித்தியத்தின்  காதலன்

மரணம் என்று.death.jpg

Advertisements