பூப்பதில்
இலைகள் துளிர்த்தலில்
மழைத்துாத்தலில்
பூண்டுகள் வளர்தலில்
கழன்றுவீழும் இலைகளில்
ஈரப்புற்களில்
உறைந்த பனித்துகள்களில்
பகல்கள் கூடிக் குறைந்து
இரவுகள் நீண்டு குறுகி
மாறி மாறி…
முதுமை வரை நடத்திச் செல்கின்றது
காலம்.

மனிதர்கள்
போக-வரக் கையசைப்பு 
உருக்கள் கரையப் பின்னோக்கியோடும் காட்சியில்
ஒரு யன்னல் பயணிக்கிறது.

தர்மினி

Advertisements