வாழ்க்கை புத்தகங்களைப் போல ஏனிருப்பதில்லையென்று
‘மேடம் பவாரி’ஆகிய எம்மா சிந்தித்து 160 ஆண்டுகளாயின.
ஒவ்வொரு ஆணிடத்திலும் எம்மா தேடிய கனலும் காதல்
ஈரமுத்தங்களின் பின் அணைந்து போனது.
ஆற்றங்கரையும் மலர்த்தோட்டங்களும் தனிமையின் புதர்ப் பாதைகளுமாக 
நேசத்தின் ஒளியைத் தேடித் திரிந்த அந்தரித்த மனது கொண்ட இரத்தம் வற்றிய உடல்,
நீலச் சாடியிலிருந்த வெண்ணிற நஞ்சால் தன்னைக் கொலை செய்து கொண்டது.
வாழ்க்கையைப் போலாகப் புத்தகங்கள் எத்தனை எழுதப்பட்டன எம்மா?

-தர்மினி-