‘ரோஜா’ என்றெழுதினால்
வழக்கொழிந்து போனதென்றார்கள்.
ராஜாவின் எத்தனை பாட்டுகளில் ரோஜா வந்தாலும்
அலுத்துப் போனதா?
முட்கள் பற்றிய தத்துவங்கள் தேவை தானே?
சொர்க்கம் என்றால் ரோஜாத்தோட்டம் என்பது அம்மாவின் கதை
ரோஜாவிற்காக நீ செலவழிக்கும் நேரத்தின் பெறுமதி அன்பைச் சொல்லும் என்றான் குட்டி இளவரசன்.
சிவப்பு – கறுப்பு நிற ரோஜாக்களின் கவிதையொன்றை இன்றும் கண்டேன்.
நான்
வெள்ளை ரோஜாக்களை வளைத்துக்கட்டிய முடியொன்றைச் சூடிய கனவு
ஒரு கதையைப் படித்த இரவில் கண்டது.
ரோஜாப்பூக்களுக்கு
நிறந்தீட்டிக் கொண்டிருக்கும் சிறுமி
ரோஸ் நிறங்கொண்டவை மட்டும் தான் ரோஜா என்கிறாள்.

தர்மினி