நண்பர் கிரீஷ் பால்புதுமையினருக்கான யூன் மாதத்தைச் சிறப்பிக்கும் விதமாகக் குறிப்புகளைப் பதிவிடுமாறு நண்பர்களிடம் கேட்டிருந்தார்.அவ்வரிசையில் கடந்த மாதம் ஃபேஸ்புக்கில் நான் எழுதிய பதிவு. மகிழ்வோடு இணைகிறேன். 
*
சக மனிதரைப் பற்றித் தீர்ப்புகளை வழங்காமல் அவர்களை அவர்களாக அன்பு செய்யத் தயாரற்ற உலகம் தானிது.
பால்புதுமையினர் பற்றிய அறிதல் அல்லது புரிந்துணர்வு எனக்கு எப்படி ஏற்பட்டது என நினைவில்லை. நான் சிறுவயது முதலாக மேற்கொண்ட புத்தகவாசிப்பு பால்புதுமையினர் பற்றிய அறிதலை ஏதோ ஓரிடத்தில் அறிவுறித்தியிருக்கலாம். ஊரில் வாழ்ந்த காலத்தில் ஆண்-பெண் இருமைக்கு மாறன இயல்புள்ள ஒருவரைப் பார்த்துச் சிரித்தவர்களை -கேலி செய்தவர்களை வேதனையுடன் கடந்து போயிருக்கிறேன். திரைப்படங்களில் சிரிப்புக் காட்டுவதாக நினைத்து வசனங்களையும் காட்சிகளையும் அமைப்பதைப் பார்த்துக் கோபம் ஏற்படுகின்றது. ஒருவரது உடலமைப்பு,நிறம், ஊனம்,அடிவாங்குதல் மற்றும் கீழே விழுதல் கேலி செய்யப்படக்கூடியவை எனப்பலரும் நினைக்கின்றனர்.பிறரது துன்பங்களும் தத்தளிப்புகளும் மனிதர்களுக்கு ஏன் சிரிப்புக்கிடமாகிறது? பால்புதுமையினரது விருப்பங்களும் தெரிவுகளும் அவர்களது மனநிலையை உணர மறுப்பவர்களால் புண்படுத்தப்படுகின்றது.தமக்கான இயல்பில் இருக்க-வாழ முனைவது சகமனிதர்களால் விளங்கிக்கொள்ளப்படுவதில்லை.யூன்நண்பர் கிரீஷ் பால்புதுமையினருக்கான மாதத்தைச் சிறப்பிக்கும் விதமாகக் குறிப்புகளைப் பதிவிடுமாறு நண்பர்களிடம் கேட்டிருந்தார்.அவ்வரிசையில் இன்று என் பதிவு. மகிழ்வோடு இணைகிறேன். 
*
சக மனிதரைப் பற்றித் தீர்ப்புகளை வழங்காமல் அவர்களை அவர்களாக அன்பு செய்யத் தயாரற்ற உலகம் தானிது.
பால்புதுமையினர் பற்றிய அறிதல் அல்லது புரிந்துணர்வு எனக்கு எப்படி ஏற்பட்டது என நினைவில்லை. நான் சிறுவயது முதலாக மேற்கொண்ட புத்தகவாசிப்பு பால்புதுமையினர் பற்றிய அறிதலை ஏதோ ஓரிடத்தில் அறிவுறித்தியிருக்கலாம். ஊரில் வாழ்ந்த காலத்தில் ஆண்-பெண் இருமைக்கு மாறன இயல்புள்ள ஒருவரைப் பார்த்துச் சிரித்தவர்களை -கேலி செய்தவர்களை வேதனையுடன் கடந்து போயிருக்கிறேன். திரைப்படங்களில் சிரிப்புக் காட்டுவதாக நினைத்து வசனங்களையும் காட்சிகளையும் அமைப்பதைப் பார்த்துக் கோபம் ஏற்படுகின்றது. ஒருவரது உடலமைப்பு,நிறம், ஊனம்,அடிவாங்குதல் மற்றும் கீழே விழுதல் கேலி செய்யப்படக்கூடியவை எனப்பலரும் நினைக்கின்றனர்.பிறரது துன்பங்களும் தத்தளிப்புகளும் மனிதர்களுக்கு ஏன் சிரிப்புக்கிடமாகிறது? பால்புதுமையினரது விருப்பங்களும் தெரிவுகளும் அவர்களது மனநிலையை உணர மறுப்பவர்களால் புண்படுத்தப்படுகின்றது.தமக்கான இயல்பில் இருக்க-வாழ முனைவது சகமனிதர்களால் விளங்கிக்கொள்ளப்படுவதில்லை.

சமபாலீர்ப்பினர் மற்றும் பிறப்பினால் அடையாளப்படுத்தப்பட்ட பால்நிலையிலிருந்து தம் உணர்வினால் உந்தப்பட்டுத் தாம் விரும்பித் தெரிவு செய்த பால்நிலையினர் பற்றிய புரிந்துணர்வு அற்றவர்களாகவே பலரும் இருக்கின்றனர்.
‘நான் வித்யா’ என்ற லிவிங் ஸ்மைல் வித்யாவின் வாழ்வைப் படித்த போது இன்னும் ஆழமாக இவ்வுணர்வுகளை அறிந்து கொண்டேன். அப்புத்தகத்தைப் படித்த பின் அதைப்பற்றிப் பிறரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே 2008இல் தேசம்நெற் இணையத்தளத்தில் ஒரு கட்டுரையை எழுத என்னைத் துாண்டியது.முதன் முதலில் நான் எழுதி இணையத்தில் வெளியாகிய கட்டுரை அது தான்.அதன் பின்பு தான் தமிழ் தட்டச்சைக் கற்றுக்கொண்டேன்.

பிரியாபாபு எழுதிய ‘அரவானிகளின் சமூகவரைவியல்’ ரேவதியின் ‘உணர்வும் உருவமும்’, ‘வெள்ளை மொழி’ மற்றும் பால்புதுமையினர் தொடர்பாகச் சிலரது கட்டுரைகள்,பேட்டிகள் என வாசிப்பும் ஃபேஸ்புக்கில் நண்பர்களாகவும் அவர்களிடும் பதிவுகளாகவும் மனித உணர்வுகளைப் புரிந்து கொள்ளவும் மதிக்கவும் பிரச்சினைகளை அறியவும் முடிகிறது. இரு வருடங்களின் முன்பு பார்த்த மாலினி ஜீவரத்தினத்தின் Ladies and gentle women படமும் சமபால் ஈர்ப்பினர் பற்றிய அறிதலை மேலும் ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு வெளியாகிய கிரீஷ் எழுதிய ‘விடுபட்டவை’ என்ற தொகுப்பும் இன்னுமின்னும் எனக்கான அறிதலை மேம்படுத்தியதாக உணர்கிறேன்.

அவரவர் பாலினம் பற்றிய தெரிவும் உறவும் அவர்களது சுதந்திரம் என்ற நாகரிகத்தைப் பிறர் கைக்கொண்டாலே போதும். இம்மாதம் பால்புதுமையினர் இதுவரை பெற்ற தம் உரிமைகளைக் கொண்டாடுவதும் தமது குரல்களை மேலும் மேலும் உரத்து வெளிப்படுத்தவும் சிறப்பான மாதம். அரசாங்கம் சட்டங்களை இயற்றிச் செயற்படுத்துவது மட்டும் போதாது சமூகம் தன் மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

தர்மினி