1.
சும்மாவோ சோளகமோ
வீசுகிறது வேகமாக
வெம்மையைத் தணிக்க இடிஇடித்து
முழக்கமிடுகிறது வானக்காதல்
ஈரஞ்சுமந்த முகில்கள்
கருகருவென ஊர்ந்து வருகின்றன
அம்முதுபெண்ணின்
தளர்ந்த மார்பகங்களில்
மழைத்துளிகள் குதித்தோடுகின்றன
ஏந்திய கைகளிரண்டில் வழுகிவிழுகிறது
வெள்ளிமீன்

****
2.
எல்லாம் தவிர்த்து
ஒற்றைப் புள்ளியாக
அலைதலில்
அவளொரு வண்ணப்பட்டம்
விண்கூவ
படபடத்து நடனமிடுகிறது வால்
பட்டத்தைத் துரத்தும்
சிறுமியின் கைகளில் நுால்
அவளைத் துரத்திச் செல்லும் காற்றில்
படபடக்கிறது கால்களின் குதிப்பு
****
தர்மினி
09.07.2020