தூமை

ஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்

தூமை எனும் பெயரைப் பற்றி….

“தூமை” என்பது பெண்களை இழிவு படுத்துவதற்காக ஆணாதிக்க சமூகம் கையிலெடுத்துக் கொண்ட ஒரு விடயம்.

 

1.   ‘தூமைவெளியேற்றத்தில் வெளியேறுவது கருத்தரிப்பிற்காக உடல் தயாரிக்கும் குருதி. அக்குருதியிலேதான் பிறப்பு நிகழ்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அப்பிறப்பை ஒட்டித்தான் மானுட வாழ்வே இருக்கிறது. அப்பிறப்பும் வாரிசுகளும் மனிதனுக்குத் தேவை. ஆனால் தூமை மட்டும் கேவலம். பெண்ணிடம் புணர்ந்து குழந்தைகளை உருவாக்க வேண்டும். அப்புணர்ச்சிக்காகவும் கணவனின் இச்சைக்காகவும் மட்டுமே பெண் காம உணர்ச்சிக்குள்ளாக வேண்டும். கணவர்கள் கதை அப்படி அல்ல. அவர்களுக்கு அதற்கான வேறு இடங்களைத் தேடிச் செல்ல உரிமை உண்டு.

2. தூமையைக் குறித்த கற்பனைகளும், கதையாடல்களும், சாதிப் பிரயோகங்களும் ஏராளம். பார்ப்பன சாதியில், மற்றும் இந்துமதத்தைக் கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டிருப்பவர்களிடையிலும் மூன்று நாட்கள் தனியே வீட்டின் பின்  இருக்க வேண்டும். மற்றவர்  தொடலாகாது. குழந்தைகள்  நாடிவந்தால் அவர்கள் உடுப்புகளை நீங்கள் கழற்றிவிட வேண்டும். அவ்வுடுப்புகளையும் இம்மூன்று நாட்கள்  பயன்படுத்திய உடை, படுக்கை மட்டும் சாமான்களையும் நான்காம் நாள் கழுவிய பிறகு வீட்டிலுள்ளோர் மஞ்சள் நீர் தெளித்து உள்ளே சேர்த்துக் கொள்வர். “தீட்டு” கழிய இந்த ஏற்பாடு. தீட்டு!

3. பெண்மையின் குறியீடாக இருக்கும் இத் தூமையை அடையும் இளம் பெண்கள் ‘கொண்டாடப்படுவது’ சமூகத்திலுள்ள மற்ற ஆண்களுக்கும் இதைப்பற்றி அறிவிப்பதற்காகவும் அவளது நடவடிக்கைகளில் அந்நாள் முதல் மாற்றம் ஏற்படுத்துவதற்காகவும் தான். பொருளாதாரக் குறையுடையோர் சிலர் வீடுகளில் பெண் பூப்படைந்தவுடன் அவள் திருமணத்திற்கு செல்வம் சேர்க்கவில்லையே என்ற கவலை மேலோங்கி ஒப்பாரி வைத்து அழுவதும் உண்டு. தமிழகத்தில் “தூய்மைக்குடிக்கி” என்ற சொல் ஒரு வசைச் சொல்லாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. தாயின் கருவிலுள்ளபோது தூமையைக் குடித்தவன் என்ற பொருளில் இது எவ்வாறு வசைச் சொல்லாக முடியும்?

இச்சமூகத் தூய்மையாக்கங்களிலிருந்து பெண்கள் வெளியேறி மேற்கொள்ளும் ஒரு எழுத்து முயற்சி என்பதற்காகவே இத்தலைப்பு.

தர்மினி-மோனிகா

67 thoughts on “தூமை எனும் பெயரைப் பற்றி….

  1. என்ன ஆச்சரியமான சந்தோசம்!
    இனிதாய் நம்பிக்கையுடன் தொடங்குகிறது இன்றைய உயிர்த்த ஞாயறு!
    ஆகா! டார்க்கஸ் டே இஸ் நியரஸ் டெளன் என்பது இதுதானா!
    என்ன மோனிகா நான் இங்கிலிஸில் சரியா சொல்லியிருக்கிறேனா?
    தூமைப்பேய் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
    துடக்கிடாமை வந்தால் அன்றைய பெண்கள் துணிகட்டுவார்கள் இல்லையா!
    அந்தத் தூமைத் துணியைத் தேடிமட்டுமே அந்த விளிம்பு நிலைப்பேய் வரும்!
    நம் சமூக அரங்கத்திலும் அந்தரங்கத்திலும் அந்தத் தூமைப்பேயின் இடம் நிச்சயமானது உறுதியானது காவியமானது அழிக்கமுடியாதது.
    அம்மாவுடன் சேர்த்து நம்வீட்டில் நான்கு பெண்கள்.
    அந்தத் தூமைத்துணியைத் தூமைப்பேய்க்கு அஞ்சி ஒழிப்பதைச் சிறுவனாக அறிந்திருக்கிறேன்!
    சிறுவனாக இருந்ததாலேதான் அறியக்கூடியதாக இருந்திருக்குமில்லையா?
    நம்மூர் வட்டுக்கோட்டை மாந்திரீக,மருத்துவத்தில் மகா பிரபலம்.
    இராச வைத்தியத்திலிருந்து கைவைத்தியம் வரை அத்தனையும் உண்டு.
    அறிந்த அறிந்திராத அத்தனை சிறுதெய்வங்களும் உண்டு.
    எல்லா வருத்தத்திற்கும் முதலில் பார்வையும் பார்த்துவிடுவதுண்டு.
    எனக்கு வைத்தியத்திலும்விட பார்வை பார்ப்பதில்தான் ஆர்வம் அதிகம் நம்பிக்கையும்.
    தொலைதூரங்களிலிருந்து தங்கள் பெண்களைக் கூட்டிக்கொண்டு தாய்மார் புலம்பெயர்ந்து வருவார்கள்.
    பார்வை பார்த்தபின் கையில களுத்திலை இருக்கிறதை குடுத்துவிட்டு தங்கள் பெண்களை நம்மூரில் விட்டுவிட்டுப் போய்விடுவார்கள்.
    அவர்கள் தங்கள் வயிற்றிலிருக்கும் கருவை அழித்தபின் ஓய்வெடுத்து பின் தம்மூருக்குப் போவார்கள். அனேகமாக மேற்படிப்பு முடிந்ததென்றுதான் இருக்கும் அவர்கள் ஊரில். பெரும்பாலும் வெள்ளாளர்கள்தான் வருவார்கள்.
    நான் கடைசியாகப்பார்த்தது பருத்தித்துறையிலிருந்து வந்த தாயையும் மகளையும்.
    ஆனால் ஆனைக்கோட்டைக்கு அங்காலை ஒரு வைத்தியர் வீட்டில் அவரது அடிவளவில் ஏராளம் குழந்தைகளைப் புதைத்த நிலத்தை டிரக்ரர் கொண்டு உழுதது போலிஸ்.
    என்னருமை யாழ்ப்பாணமே!
    தூமைப்பேய் உருவகத்தில் 95 வாக்கில் ஒருகவிதை எழுதியிருக்கிறேன்.
    புத்தி அறிஞ்ச பெண்ணின் தூமைச்சீலை தேடிப்போன
    தூமைப்பேய் எங்கே போனது
    முலை சூப்பிப்பத்தாமல் சேட்டின் மூலையைச்சூப்பி
    பின் கடித்துக் கிழித்து
    கடிகாரம் ஓடுமுன் வெளிநாட்டிற்கோடிய
    குழந்தைகளின் கடவுச்சீட்டுக்குள் போனது
    (கவிதையின் தொடர்ச்சி இப்போது ஞாபகமில்லை! அக்காலத்திய ஏதாவது சிறு சஞ்சிகையில் அல்லது தாயகத்தில் இருக்கும்,இரஜீன் குமாரும் தூமைப்பேய் குறித்த ஒரு கவிதை எழுதியிருக்கிறார்)

    1. அன்பு அமுதா, இன்னும் நான் – கடவுள் பார்க்கவில்லை. படம் பார்த்தபின் இதைக்குறித்து மேலும் பேசுவோம்.

      அன்புடன்
      மோனிகா

  2. மோனிகா, தர்மினி
    உங்கள் இணையத்தளத்தின் பெயரைப் புனிதப்படுத்துங்கள்.ஏனெனில் இதன் அர்த்தம் பலருக்குத் தெரியாமல் வழக்கொழிந்து விட்டது.அதன் கருத்தைச் சென்னை செந்தமிழ் அகராதியில் பார்த்து அதிர்ந்து விட்டேன்.சண்டைக்குப் பயன்படுத்தும் வசைச் சொல்லை வலம்வர விட்டுவிட்டீர்களே.உங்கள் வாயால் —–டொட் கொம் என்று எப்படிச் சொல்லி அறிமுகஞ் செய்வீர்கள்? வாசகர்களை எவ்வாறு அதிகரிப்பீர்கள்?ஆயிரங்காரணங்கள் சொன்னாலும் அது தூய்மை அழிக்கப்பட்ட சொல் தானே.உலகில் தலைப்பிட ஏராளஞ் சொற்களுண்டு.சில விடயங்கள் மறைக்கப்பட வேண்டியவை தானே.புதுமை புரட்சி என்று ஏன் தூய்மையான ஆனால் விளம்பரப்படுத்த அவசியமில்லாத விடயங்களை முற்றத்திற்குக் கொண்டு வருகிறீர்கள்?
    பழைய ஏற்பாடு ‘லேவியர்’-12ல் பேறுகாலப் பெண்ணைத் தூய்மைப் படுத்தல் என்னும் தலைப்பிலுள்ளதை படித்துப் பாருங்கள்.பைபிளில் தீட்டு குறித்து எழுதப்பட்டுள்ளதை பார்த்து வியப்படையலாம்.
    ஆகவே, அவசியமற்று வசைச் சொல்லொன்றை உலவவிடுவதைத் தவிர்த்திடுங்கள்.

    மரியா
    பிராங்போர்ட்,ஜேர்மனி.

  3. அன்புள்ள மரியா, பெண்களிடையே பிள்ளைப்பேறு, பதிவிரதம், இல்லறம் பேணுதல் போன்றவற்றை புனிதமாகக்கருதி போற்றுவது அவளை தெய்வமாக்கி வழிபடுவது என்கிற ஒரு போக்கும் அதே நேரம் கருவுறாத பெண்ணை மலடி என்பது, கருவுறுவதற்கு காரணாக இருக்கும் தூமை வெளிப்பாட்டை தீட்டு என்பது, இல்லறத்தில் நாட்டமில்லாத பெண்களின் நடத்தையை இழித்துப் பேசுவது அவர்களின் உடற்பாகங்களை வசைசொல்லாகப் பயன்படுத்துவது போன்ற செயல்கள் காலம் காலமாக ஆணாதிக்க கருத்தாக்கங்களால் கட்டமைக்கப்பட்ட சமூகத்தில் நடந்து வருகின்றன. எனவேதான், வசைச்சொல் மரபிலிருந்து இவ்வார்த்தைக்கு விடுதலை கோரி இத்தலைப்பு. விவிலியக் கருத்துக்களை முன்வைத்து நீங்கள் ஒரு கட்டுரை சமர்ப்பிப்பீர்களானால் மேலும் விவாதத்தைத் தொடர ஏதுவாக இருக்கும். அது அவசியமான ஒன்று என்றும் கருதுகிறேன்.
    -அன்புடன் மோனிகா

  4. தங்களின் மறு மொழிக்கு நன்றி மோனிகா அவர்களே…

    என் பெயர் அப்துல் முத்தலிப். தூமை என்ற வார்த்தைக்கு என் தோழி ஒருவர் ஒரு விளக்கம் சொன்னார். ஒரு தோழன் ஒருவனும் சொன்னான். இருவர் சொன்னதும் ஒரே பொருள் தான். ஆனால் தொனி வேறுபட்டது.

    ஆதிக்கம் / ஆணாதிக்கம் ஒழிய தங்களின் இந்த முயற்சி இறைவன் (இதிலும் ஆ. ஆ.) வசம் பிரார்த்திக்கிறேன்.

    சுயம்பு என்றால் தன்னால் உருவாவது என்று எங்கள் ஊர் பாட்டி ஒருவர் சொன்னார். நான் கடவுள் பார்த்து விட்டால் இதையும் விளக்குங்கள்.

  5. அன்புள்ள சகோதரிக்கு வணக்கம் உங்கள் எண்ணங்கள் ஆணாதிக்கம் என்று நீங்கள் நம்பும் விசியத்தை எதிர்த்து வெற்றி பெற என் அன்பு வாழ்த்துக்கள் . நீங்கள் சொன்ன அந்த மூன்று நாட்களில் பெண்களை தனியே ஒதிக்கி வைத்தது எதற்கு என்று உங்கள் அக கண்களை திறந்து பார்த்து புரிய முயற்சி செய்யுங்களேன் . உதிர போக்கு ஏற்ப்படும் காலங்களில் பெண் தன்னுடையா சக்தியை பெருமளவு இழக்கிறாள் . அவளுக்கு அந்த நாட்களில் மிகுந்த ஓய்வு தேவை என்று தான் அவளை அப்போது அவளை பின் கட்டில் விட்டார்கள் அதுவும் கூட சுகதரத்திற்கு இப்ப இருக்கற மாரி அறைக்கு ஒரு குளியலறை இருக்காது . அந்த காலத்துல ஒரே வீட்டுல கூட்டு குடுப்பமா இருந்தாங்க அப்பா கூட பொட காணி நு சொல்லற பின் கட்டுள தன் இருக்கும் . அவங்க அடிகடி அங்க போய் வர சிரம படக்கூடாது நு தீட்டு நு ஒரு மாயையை ஏற்ப்படுத்தி அவங்களு ஓய்வும் சுகதரமும் தருவதற்கு செய்யப்பட்ட ஒரு ஏற்ப்பாடு பிற்க்காலத்தில் மருவி விட்டது .என்று நான் நம்புகிறேன் .

    நான் சொன்னது தவறாக இருந்த மனிசுருங்க ஆனா எனக்கு தெரிஞ்ச உண்மை இது தான்

  6. தோழர்
    அவ்வாறான மனப்பான்மையில் ஒதுக்கப்பட்டு தனித்திருத்தினர்.இன்றும் ஓய்வு வேண்டும் இல்லையெனச் சொல்லவில்ல.ஆனால் அதைக் கேவலமான சொல்லாகவும் திட்டுவதற்கும் ஏன் பயன்படுத்த வேண்டும்?முதற்தடவை ஏற்படும் மாதவிடாய் கொண்டாட்டமாகவும் அகற்குப் பின்னானவை வெட்கப் படும் விடயமாகவுமே பார்க்கப்படும் மனநிலையுண்டு.அது இயல்பு பெண்ணுடலின் தளர்வான தருணமென ஏற்றுக் கொள்ளட்டும்.இப்பவும் தூமை என்ற பெயர் வைத்ததால் நம் வலைத்தளத்தைப் புறக்கணிக்கும் சிலரையும் எதிர் கொண்டுள்ளோம்.

  7. முத்தாலிப்
    இன்று வரை நான் கடவுள் பார்க்க முடியவில்லை.ஆனால் சுயம்பு என்ற சொல்லுக்கு தானாகவே தோன்றியது உருவானது என்பதே அர்த்தம்.

  8. Well, shocked by reading your reply for the queries submitted on Thoomai. Why dont you name your E-Paper Thoomai as PUNDAI both will give you the same impact on vulgarity. If you name it as PUNDAI you will attract more readers and visiters to your site. Thanks for your service tothe learned tamil society.

    1. Neither the title is intended to shock you. Perversion is in the eyes of the beholder and not in the words/body parts. Indeed the site was made inorder to make people like you to understand that they are neither things of disgust and nor to be regarded too sacred. Incase we need to expand our blog we will consider your suggestion! Looking forward to do more service to the Tamil Society (to the learned too, if needed!)…

      Editors- Thoomai

  9. எமது அன்பே துர்க்கா!
    எம்முடன் கைகோர்த்தமைக்கும் பாராட்டுக்கும் நன்றி.அப்படியே உங்கள் ஆக்கங்களையும் அனுப்பி வைப்பீர்களாயின் மிகுந்த உவகையடைவோம்.
    முத்தங்களுடன்
    மோனிகா, தர்மினி

  10. தீட்டு என்பது பெண்ணோடு கூட இயலாமல் போய் விடுகின்ற நாட்களில் தன் காமத்தை தீர்த்துக்கொள்ள வழியற்று அவள் மீது ஆண் கொண்ட ஆதி வெறுப்பின் நீட்சி..

    vaazthukkal

  11. அன்பு சகோதரிகளுக்கு,
    வசைச் சொல்லாக இருக்கும் வார்த்தை இனி நல்ல வார்த்தையாக மாறும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறீர்கள்… இதை பெண்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டிய நிலை இருக்கிறது.

    உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்

  12. தாயின் கருவிலுள்ள ஒருவன் தூமையைக் குடித்தவன் என்கிற விளக்கம் தவறானது. ஆணின் விந்தை எதிர்பார்த்துக் காத்திருந்து ஈற்றில் கருக்கட்டல் ஏற்படாததால் சிதைந்துபோகும் முட்டைகள்தான் ’தூமம்’ எனப்ப்டுகின்றது. ஒரு முட்டை கருவாகிவிட்டால் அது தூமம் ஆக்கப்படும் வாய்ப்பே இல்லை. கரு உருவானதும் அது கருவறையின் சுவரில் புதைக்கப்பட்டுவிடுவதால் அதற்கும் கருக்கட்டப்படாத ஏனைய முட்டைகளுக்குமான தொடுகைக்கே வாய்ப்பில்லை. ஆக இவ்வசை ’தாயின் கருவிலுள்ளபோது தூமையைக் குடித்தவன்’ என்ற பொருளில் அமைய வாய்ப்பில்லை. தான் கொண்ட காமம்தாளாது தூமம் வெளி்யேறிக்கொண்டிருக்கும் அணங்கின் யோனியைச் சுவைத்தவன்/புணர்ந்தவன் என்றே கொள்ளப்படும். அது வசையா அல்லவா என்பது வேறுவிடயம்.

  13. சகோதரிகள் மோனிகா,தர்மினிக்கு,
    முதலில் உங்களின் இத்தகைய முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.தீட்டு என்ற வார்த்தை பிரயோகம் பெண்களின் மாதவிடாய் காலங்களை குறித்து பயன்படுத்த மட்டுமே கேட்டதுண்டு.ஆனால் முதல் முறையாக தூமை என்ற வார்த்தையை வடிவேலுவின் நகைச்சுவை காட்சி ஒன்றிலும் பின்னர் நான் கடவுளிலும் பயன்படுத்தக் கண்டேன்.அது தவறான வார்த்தையாக இருக்கக்கூடும் என்பது மட்டுமே தோன்றியதே தவிற அதன் பொருள் உங்களின் விளக்கம் படிக்கும் வரை தெரியாது.
    மேலும் உங்களின் இந்த வார்த்தைப் பிரயோக மரபியல் மாற்றப் புரட்சிக்கு ஒரு சபாஷ் போடலாமென்றாலும் கணபதி அவர்கள் கூறியது போல நம் முன்னோர்கள் தீட்டு போன்ற வார்த்தை/பழக்க வழக்கங்களை உதிரப் போக்கு காரணமாக ஏற்படக்கூடிய சுகாதாரக்கேடுகளிலிருந்து தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் காக்கும் பொருட்டே பயன்படுத்தினர் என்பது என் புரிதல்! ஆனால், தவறானவர்கள்(ஆ.ஆ) அதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்த்போகவே ஏற்பட்டதுதான் தவறான வார்த்தைப் பிரயோக மரபியல்!
    எது எப்படியோ உங்கள் புரட்சிப்பாதையில் நீங்கள் எதிர்கொள்ளப் போகும் நன்மை/தீமைகளை சமாளிக்க பாரதி கண்ட “புதுமைப்பெண்களுக்கு” என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  14. வாழ்த்துக்கள் தர்மினி, இப்பதான் உங்கள் கவிதைகளில் ஆழ்ந்து கொண்டிருக்கிறேன். நீங்கள் இவ்வளவு இயல்பழகோடு கவிதை எழுதுவீர்கள் என்பது எப்படித் இதுவரை தெரியாமல் போனது என ஆச்சரியமாக இருக்கு. ஒருவகையில் இணையம் புதிய ஆற்றல்களுக்கு களமாகி வருவது மகிழ்ச்சி தருகிறது. முழுக் கவிதைகளையும் வாசித்த பிறகு மேலும் எழுதுவேன் – வ.ஐ.ச.ஜெயபாலன்

  15. Hats off dear Monikhaa and Dharmini. You both must be very very strong willed, courageous but at the same time you have lot of kindness deep down.(This is my feeling).

    I remember that I heard this word thoomai from a woman only. She used it to scold off others as ‘en thoomaiya kudi’. (Later a friend of mine whenever he liked an actress, he would remark… surprise … surprise…’ava sandaya kudikanum’. I never heard that word until then.

    In olden days women themselves made men greater than women. I think every women must make their son to behave properly with women.
    Just today when I was talking to my(same) friend, he remarked that men have come a long way in treating a fellow women better than in olden days.(Do you agree?)

    ‘selvarajlatha’

  16. புதுச்சேரி பகுதியில் தூமை என்ற வார்த்தையை அறிந்தேன். அது கெட்டவார்த்தையாக மட்டுமே தெரி்ந்தது அவர்களுக்கு, அர்த்தம் கேட்டு கேட்டு எனக்கு சலித்துப் போனது. இப்போது அறிந்து கொண்டேன்.

    எனக்கென்னவோ ஆண் இனத்தை காப்பாற்றவே தளம் அமைக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
    வாழ்த்துகள்

  17. நான் சிறுவனாக இருக்கும் காலங்களில் தூமை என்ற இந்த சொற் பிரயோகத்தை இப்படி பிரயோகிப்பதை கேட்டுள்ளேன். அதாவது சலவைத் தொழிலாளி ஓருவரை ஓரு வயோதிப பெண் “தூமை வண்ணான்” என திட்டியதை பார்த்திருக்கிறேன். ஆனால் தற்போதுதான் புரிந்து கொண்டேன் வெள்ளாளர் என தங்களை கூறி கொள்பவர்கள் தங்களுக்கு “மரியாதை” என்னும் வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதென்பதை காட்டுவதற்காக பாவிப்பது என்று.

  18. பைபிளில் லேவியரி ஆகமம் 12ம் அதிகாரத்தில் கூறபட்டுள்ளது யாதெனில் ஓரு பெண் ஆண் பிள்ளையை பெற்றெடுத்தால் அவள் ஏழு நாட்கள் தீட்டாய் இருந்து பின்னர் முப்பது நாட்கள் உதிர சுத்திகரிப்பில் இருக்கவேண்டும் என்றும், பெண் பிள்ளையை பெற்றெடுத்தால் இரண்டு வாரம் தீட்டாய் இருந்து அறுபது நாட்கள் உதிர சுத்திகரிப்பில் இருக்கவேண்டும் எனவும் கூறபட்டுள்ளது. இது ஆணாதிக்க வக்கிரத்தின் வெளிப்பாடாகும். இது சுகாதாரத்திற்காக சொல்லபட்டிருந்தால் ஏன் பெண் பிள்ளை பெற்றால் தீட்டாய் இருப்பதும் உதிர சுத்திகரிப்பும் ஏன் இருமடங்காக அதிகரிக்கின்றன. இதற்கு வேறு கர்த்தர் கூறியிருப்பதாக ஓரு பித்தலாட்டம்.

  19. This is bastardism. No man can suck mother’s pussy/cunt after he becomes a “complete” man.

    If this site wants to do that, then it is highly a phyco issue.

    Women can never be a equal to men.

    They are always lesser than men in all aspects except sexual organs and maternity. This is fact and this is science.

    For getting their sexual desires / dreams come ture, women like leena manimekalai write like this.

  20. Dear Monica,

    Please go ahead with your writing. As long as your efforts help to reduce crimes against women even in a small way I am for you.
    You seemed to have the courage and conviction. For too long women have silently borne many abuses meaning the yoni and other parts and nice to know they are fighting back. Hats off to you !

  21. வணக்கம் அன்பு சகோதரிகளே…
    மாதவிடாய்க் காலங்களில் வரும் இந்த உதிரப் போக்கு என்பது குழந்தையை உருவாக்குவதற்குத் தேவையான சத்துகளைக் கொண்டதாகும் என்றும் அப்படி குழந்தையை உருவாக்காதபட்சத்தில் அது வீணாக உதிரப் போக்காக மாறுகிறது என்றும் ஒரு வணிகக் கூட்டத்தில் கேட்டஷீந்தேன். இது உண்மை தானே சகோதரி…

    1. அன்புள்ள வான்மதி,
      காலம் தாழ்த்தி பதிலளித்தமைக்கு மன்னிக்கவும். கருப்பையின் அறைகளைச் சுற்றி ஒரு layer ஒன்று மாதத்திற்கு ஒரு முறை உருவாகிறது. இது கருமுட்டைகளை கருத்தரித்தல் காலத்தில் பத்திரமாக பார்த்துக் கொள்வதற்காக இயற்கையிலேயே உருவாகும் ஒன்று. கருத்தரித்தல் நிகழாத பட்சத்தில் அது தானாகவே வெளியேறிவிடுகிறது. அதுவே மாதவிடாயின்போது ஏற்படும் இரத்தப் போக்காகும்.
      அன்புடன்
      மோனிகா.

  22. இந்தப் பக்கத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வாதப் பிரதி வாதங்களைக் காணும்போது ஆச்சரியமாக இருக்கிறது. பெரும்பாலானவர்கள் தர்மினி & மோனிகா விற்கு ஆதரவாக நிற்பது மனநிறைவு தருகிறது. இதில் அடியேனின் கருத்தையும் பதிவு செய்கிறேன். “எனது கிராமமாகிய யாழ் அல்லைப்பிட்டியில் இரண்டு பெண்கள் இந்த வார்த்தையை உபயோகிக்க கேட்டிருக்கிறேன், அவர்கள் இருவருமே இப்போது உயிரோடு இல்லை. ஒருவர் அல்லை முதலாம் வட்டாரத்தை சேர்ந்த மூதாட்டி, இரண்டாமவர் அல்லை இரண்டாம் வட்டாரத்தைச் சேர்ந்த ஒரு மூதாட்டி. ஆச்சரியமான ஒரு ஒற்றுமை இருவருமே ஒருதாய் வயிற்றுச் சகோதரிகள். அவர்கள் எப்போதுமே ஆண்களை இழிவு படுத்தும் நோக்கிலேயே “டேய் தூமை”, “டேய் தூமைச்சீலை” என்ற வார்த்தைகளைப் பிரயோகித்தனர். யாழ் குருநகரில் பல பெண்கள், ஆண்களைத் திட்டும்போது இந்த வார்த்தைகள் ‘எறிகணைகளாக’ காற்றில் பறந்து செல்வதைப் பார்த்திருக்கிறேன். தமிழ்நாட்டில் மதுரையில், ஒரு ஏழைப் பெண், தன்னை மிகவும் கொடுமையாக நடத்திய தனது எஜமானனைப் பற்றி என்னிடம் குறிப்பிடும்போது, எஜமானனின் பெயருக்குப் பதிலாக ‘அந்தத் தூமயக்குடிக்கி’ என்ற சொல்லைப் பிரயோகித்தாள். எனது வாழ்நாளில் எந்த ஆணும் பெண்ணை இழிவு படுத்த இந்த வார்த்தைகளைப் பிரயோகித்ததாக நான் அறியேன். இது எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்றால் ‘பெண்களிடமிருந்தே’ என்றுதான் என்னால் நம்ப முடிகிறது”.

    1. இ.சொ.லிங்கதாசன் அவர்களுக்கு, “தூமை” என்பது பெண்களை இழிவு படுத்துவதற்காக ஆணாதிக்க சமூகம் கையிலெடுத்துக் கொண்ட ஒரு விடயம்”. என்ற கருத்துக்கு பதிலாக அச் சொல் பெண்களாலேயே ஒரு இழி சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது என்று நீங்கள் சொல்வது நன்றாகப் புரிகிறது. அதே நேரம் பெண்களின் கருத்தாடல்களும் பெரும்பான்மையில் ஆணாதிக்க சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட ஒன்று என்பதால் அதில் ஆச்சரியம் கொள்வதற்கு ஒன்றுமில்லை என்றே கருதுகிறேன். உங்கள் பகிர்தலுக்கு நன்றி. – மோனிகா

  23. சொன்னது யாரென்று கேட்டால் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும், நம்புங்கள் எங்கள் கவிப்பேரரசுதான் சொல்கிறார் தூமச்சீலை என்பது தூய்மைச்சேலை என்பதன் திரிபாம்.
    (கள்ளிக்காட்டு இதிகாசம், பக்கம் -121) அதாவது தூமச்சேலையில் இருக்கும் அழுக்கு அல்லது உடைந்துவெளியேறிய பெண் முட்டைகளின் சிதிலமும் குருதியும் ஒருபோதும் தூமம் என வழங்கப்படவில்லை எனவும் கொள்ளலாம். காரணம் தூமம் அல்லது தூமை என்கிற சொல் இலக்கியங்களிலோ காவியங்களிலோ இதிகாசங்களிலோ எங்கும் பதிவாகியிருப்பதாகத் தெரியவில்லை. வேதியியலில் தூமம் என்றால் வாசனைத்திரவியம் அல்லது Fumes என்றே பொருள்படும். பெண்களைப்பழித்த சித்தர்களோ , அல்லது பட்டினத்தார்கூட பீறுமலமும் குருதியும் வழியும் பெருங்குழியினின்று ஏறும் வழி கண்டிலேன் என்றாரே தவிர தூமம் என்கிற வார்த்தையைப் பிரயோகிக்கவில்லை என்பதுவும் கவனிக்கப்பாலது.

  24. சித்தர்கள் பெண்களை என்றும் இழிவுபடுத்தியதாக நான் அறிந்திலேன்…

    உங்களுக்காக சிவவாக்கிய சித்தரின் பாடல்கள்…

    ஊறிநின்ற தூமையை உறைந்துநின்ற சீவனை
    வேறுபேசி மூடரே விளைந்தவாறது ஏதடா
    நாறுகின்ற தூமையல்லோ நற்குலங்க ளாவன
    சீறுகின்ற மூடனேஅத் தூமைநின்ற கோலமே

    தூமைகண்டு நின்றபெண்ணின் தூமைதானும் ஊறியே
    சீமையெங்கும் ஆணும் பெண்ணும் சேர்ந்துலகங்கண்டதே
    தூமைதானும் ஆசையாய்த் துறந்திருந்த சீவனை
    தூமையற்று கொண்டிருந்த தேசமேது தேசமே

    முட்டுகண்ட தூமையின் முளைத்தெழுந்த சீவனை
    கட்டுகொண்டு நின்றிடம் கடந்துநோக்க வல்லீரேல்
    முட்டுமற்று கட்டுமற்று முடியிநின்ற நாதனை
    எட்டுத்திக்கும் கையினால் இருத்தவீட தாகுமே

    ஐயிரண்டு திங்களாய் அடங்கிநின்ற தூமைதான்
    கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே
    மெய்திரண்டு சத்தமாய் விளங்கிரச கந்தமும்
    தூய்யகாயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே

    அன்னைகர்ப்பத் தூமையில் அவதரித்த சுக்கிலம்
    முன்னையே தரித்ததும் பனித்துளிபோ லாகுமோ
    உன்னிதொக் குலழலுந் தூமையுள்ளுளே அடங்கிடும்
    பின்னையே பிறப்பதுந் தூமைகாணும் பித்தரே

    தரையினில் கிடந்தபோ தன்றுதூமை என்றிலீர்
    துறையறிந்து நீர்குளித்த தன்றுதூமை என்றிலீர்
    பறையறிந்து நீர்பிறந்த தன்றுதூமை என்றிலீர்
    புரையிலாத ஈசரோடு பொருந்துமாறது எங்ஙனே

    சொற்குருக்க ளானதும் சோதிமேனி யானதும்
    மெய்க்குருக்க ளானதும் வேணபூசை செய்வதும்
    சத்குருக்க ளானதும் சாத்திரங்கள் சொல்வதும்
    மெய்க்குருக்க ளானதும் திரண்டுருண்ட தூமையே.

    இங்ஙனம்
    கார்த்திக்

  25. நன்றி உன்களது முயற்சிக்கு. என் ஊரில் மிகவும் வெறுப்பானவர்களை தூமைசீலை என்று தான் திட்டுவார்கள். நான் சின்னவளாக இருந்த காலதில் தூமை சீலை எடுது மாந்திரிகம் செய்வார்கள் என்றும், இக்காலதில் பெண்கள் மாலைப்பொழுதில் வெளியில் திரிந்தால் பேய் தொடரரும் என்பார்கள். தூமை என்பதை துடக்காக பார்கும் சமூகம் அதன் உருவாக்கதால் வரும் குழந்தையை எவ்வறு சந்தோசமாக ஏற்கிறது? இந்த மோசமான நிலை உருவாக முக்கியமான காரணம் பார்பன சமூகம் தான். தங்களது போலியான சாதிய வெறிக்குள் சமூகதை தள்ளியது மட்டுமன்றி, பெண்களை ஒடுக்குவதிலும் குறியாக இருக்கின்றது.

  26. தூய்மை=தூமை பேச்சு வ்ளக்கில் தூய்மை என்பது மருவி தூமை என்று வந்திருக்கலாம். பெண் தன்னை இழிவு செய்வோரை தான் புனிதமானவள் என்பதை உணர்த்த ஆண் விந்து கலப்பில்லாத கருமுட்டை உடைந்து வெள்யேறும் தூய்மையை குடிக்கி என்று திட்டி இருக்கலாம். பழைய வ்ளக்கங்கல், பேச்சு சொற்கள் பெண்மையை உயர்வு படுத்தியே வ்ழங்கப்பட்டுள்ளன.பார்ப்பண ஆதிக்கத்திற்கு பின்பே பெண்மையை இழிவு படுத்தும் வ்ளக்கம் வந்துள்ளது. பழந்தமிழ் சொற்களும், பொருளும்-ஆத்தாள்=ஆற் றும் ஆள்-பசி,தூக்கம்,கோபம் அறிந்து ஆற் றுபவள். ஆயாள்=ஆய்வு செய்பவள்,(ஆய்+ஆள்). அக்காள்=தனக்கு முன்னவள்(அக்கரை) அத்தை=அந்த+தை =வேறுஇடத்திற்கு மணமாகி போய்விடுபவள். அக்காளுக்கும் இது பொருந்தும். மரும்க்ள்=மறொரு மகள்.பிராமணர்கள் மருமக்ளை மாட்டுப்பெண்(மாற்றுப்பெண்) என்று அழைப்பர். மக்ளுக்கும் மாற் றுப்பெண்ணுக்கும் எவ்வள்வு வித்தியாசம்.ஆச்சி என்றால் சகோதரி என்று பொருள். இளைய சகோதரியை தங்கச்சி(தங்கள்+ஆச்சி) என்றும், அத்தை மகளை அத்தாச்சி என்று அழைப்பது கிராமப்புற வளக்கம். பெண்மையை உண்மையாகப் போற் றப்படாத வரையில், நமது சமூகம் முன்னேறாது.மீண்டும் வருகையில் இன்னும் விவரிக்கிறேன்.தங்கள் பதிவு இன்றைய காலத்த்ற்கு அவசியத்தேவை என்பதை உறுதியளிக்கிறேன்.வாழ்க உமது பணி. வளர்க வலைத்தளம்

  27. அண்டமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பெண்மையின் கூறுகள்தான் நம்மிடையே தாயாகவும் தாரமாகவும் தமக்கையாகவும் தங்கையாகவும் தனக்குப் பிறந்தவளாகவும் உருவம் கொண்டுள்ளார்கள்..! நீர்,நிலம்,நெருப்பு,காற்று,ஆகாயம் இவைகளுக்கு என்ன முக்கியத்துவம் உண்டோ அதைப்போலவே பெண்மைக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும்…! அறிவியல் வழியெனினும் ஆன்மீக வழியெனினும் பெண்மையை ஆணின் தேவைக்கு உயர்த்தியும் தாழ்த்தியும் பார்ப்பதே வழக்கத்தில் இருந்திருக்கிறது…!இதை ஆண்வர்க்கம் தலைகுனிவோடு ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்..! ஆணின் நுகர்வுப்பொருளாய் பெண்ணை பார்த்ததால்தான் அழகுப்படுத்தியும் பார்த்திருக்கிறோம்..! இழிவுப்படுத்தியும் வைத்திருக்கிறோம்…இதிலிருந்து மீள்வதற்கு இதைப்போன்ற பெண்களின் நிலைப்பாடுகள் அவசியமாகிறது ..!எந்த சங்கடத்திற்கும் ஆட்படாமல் அவர்களைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம்..!

    1. உண்மை விஷாலி. அதே நேரம் குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியாத பெண்களையும் பல்வேறு பெயர்களிட்டு அழைக்கக் கூடியதாய் இருக்கிறது இச்சமூகம்.

  28. நண்ப,

    நேற்றுதான் (20-02-2011) (கடந்த வார) ஜூனியர் விகடனில் ஒரு கட்டுரை படித்தேன். டாக்டர்
    விகடன் என்ற பெயரில் இரண்டு பக்கங்கள்.

    ‘ஸ்டெம் செல்’ என்ற பெயரில் ஒரு புதிய தொழில்நுட்பம். மரபு ரீதியான பல
    கொடிய நோய்களுக்கு தீர்வு காணப் போகும் தொழில்நுட்பம் என மருத்துவ உலகம்
    எதிர்பார்க்கிறது.

    குறிப்பிட்ட கட்டுரையில் ‘தால மீசியா’ என்ற ரத்தம் தொடர்பான ஒரு
    நோயிலிருந்து ஒரு சிறுமி முற்றிலும் குணமாக்கப்பட்ட விபரங்கள்
    தரப்பட்டுள்ளன.

    ‘ஸ்டெம் செல்’ எனப்படும் செல்கள் எந்த வகையான திசுவாகவும் வளரும்
    இயல்புடையது. குழந்தைப்பேற்றின் போது கழிவென கருதப்படும் தொப்புள்
    கொடியில் இந்த ‘ஸ்டெம் செல்’ அதிகம் இருப்பதாக சொல்கிறார்கள். மேலும்
    எலும்பு மஜ்ஜையிலும் இந்த வகை செல்கள் இருக்கிறதாம். ஒவ்வொரு பகுதியில்
    கிடைக்கும் செல்களைப் பொறுத்து ஒவ்வொரு விதமான நோய்களைத் தீர்க்க
    வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

    விசயத்திற்கு வருகிறேன். இந்த வகையான செல்கள் பெண்களின் மாதவிடாய்க்
    கழிவிலும் கிடைக்கிறதாம். அதுகுறித்து ஆராய்ச்சிகள் வேகம்
    பெற்றிருப்பதாகத் தெரிவிக்கிறது அந்த கட்டுரை. இந்த ஆராய்ச்சி முடிவுகள்
    நல்ல பலனைத் தருகின்ற காலம் வரும்போது ‘மாதவிடாய்’ குறித்த கருத்துகளில்,
    பார்வையில் மாற்றம் வரும் என நம்புகிறேன்.

  29. I am a college going first year boy but i am at the side of feminist i am supporting u fully towards ur effort “ella valigalayum anupavikkira pen kittaye en indha samoogam sudandiratha parikkudu” girl is not a commodity to have it she has a life when this society is going to understand that?

  30. For your kind Information.
    The girl on her period is put out of the household for following reasons
    1. She is weak and potentially infect-able. so she is better to remove herself from the public infections
    2. The thing “Thoomai” or the eggs of a girl can infect the others as they are easily reacted to heat and other body-presence. So the dresses and other who had contact with her are supposed to bath before nearing others to avoid that infection.
    3. The turmeric water is used to bathe her and her clothes to remove the infections as turmeric is natural disinfectant.

    Before critisizing anything of the Hindu Dharma or the Mythological Evidences or the Sashtra or our Culture itself with your insolent ideas, PLEASE READ THEM FOR WHY THEY ARE DONE AND FOLLOWED IF YOUR MOTHER EVER FAILED TO EXPLAIN THESE TO YOU.

    And really, IDIOT! I am male!

    PS: There are lots of useful things about turmeric, and i regret i have a tamil sister who doesn’t know anything about our culture. 😦

  31. இப்போது தான் இந்தப் பக்கத்தை ஊன்றிப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. நல்ல முயற்சி.
    வாழ்த்துகள்!

  32. தூமையில் இருந்து வந்தது இந்த மெய். இது தான் உண்மை.
    சிவவாக்கியர் பாடல் மூலம் தூமை என்பது தூய்மையான சொல் என்று புரிகிறது.
    வாழ்த்துகள் சகோதரியே.

  33. தூமைகண்டு நின்றபெண்ணின் தூமைதானும் ஊறியே
    சீமையெங்கும் ஆணும் பெண்ணும் சேர்ந்துலகங்கண்டதே
    தூமைதானும் ஆசையாய்த் துறந்திருந்த சீவனை
    தூமையற்று கொண்டிருந்த தேசமேது தேசமே.

  34. நாகை மாவட்ட பேச்சு வழக்கில் “சாண்ட குடிக்கி” எனும் வசவுவார்த்தையை பெண்கள் பயன்படுத்துவார்கள்

monikhaa & tharmini -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி